தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஜிம்பாப்வே ரன் குவிப்பு: எர்வின், பென்னட் சதம்

ஜிம்பாப்வே ரன் குவிப்பு: எர்வின், பென்னட் சதம்

ஜிம்பாப்வே ரன் குவிப்பு: எர்வின், பென்னட் சதம்


ADDED : டிச 27, 2024 10:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2024 10:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புலவாயோ: முதல் டெஸ்ட் புலவாயோவில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 363/4 ரன் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணிக்கு சீன் வில்லியம்ஸ் (154) நம்பிக்கை தந்தார். பின் இணைந்த கேப்டன் கிரெய்க் எர்வின், பிரையன் பென்னட், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை எளிதாக சமாளித்தனர். பொறுப்பாக ஆடிய எர்வின், டெஸ்ட் அரங்கில் தனது 4வது சதம் விளாசினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 163 ரன் சேர்த்த போது எர்வின் (104) அவுட்டானார். மறுமுனையில் அசத்திய பென்னட், தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 586 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பென்னட் (110) அவுட்டாகாமல் இருந்தார்.

பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு செடிகுல்லா அடல் (3), அப்துல் மாலிக் (23) சோபிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் அணி 95/2 ரன் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மையால், 2ம் நாள் ஆட்டம் முன்னதாக முடிவுக்கு வந்தது. ரஹ்மத் ஷா (49), கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிதி (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us