/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஜிம்பாப்வே அணி அபாரம்: 127 ரன்னுக்கு சுருண்டது ஆப்கன்
/
ஜிம்பாப்வே அணி அபாரம்: 127 ரன்னுக்கு சுருண்டது ஆப்கன்
ஜிம்பாப்வே அணி அபாரம்: 127 ரன்னுக்கு சுருண்டது ஆப்கன்
ஜிம்பாப்வே அணி அபாரம்: 127 ரன்னுக்கு சுருண்டது ஆப்கன்
ADDED : அக் 20, 2025 07:17 PM

ஹராரே: ஜிம்பாப்வே பவுலர்கள் அசத்த, ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 127 ரன்னுக்கு சுருண்டது.
ஜிம்பாப்வே சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒரே ஒரு டெஸ்டில் விளையாடுகிறது. ஹராரேயில் நடக்கும் இப்போட்டியில் 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் ஜத்ரன் (19), அப்துல் மாலிக் (30), ரஹ்மானுல்லா குர்பாஸ் (37) நம்பிக்கை தந்தனர். பிராட் ஈவன்ஸ் 'வேகத்தில்' கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி (7), அப்சர் ஜஜாய் (1), ஷரபுதீன் அஷ்ரப் (0), கலில் குர்பாஸ் (2), ஜியாவுர் ரஹ்மான் (0) வெளியேறினர். ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 127 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. யாமின் அஹமத்சாய் (10) அவுட்டாகாமல் இருந்தார். ஜிம்பாப்வே சார்பில் பிராட் ஈவன்ஸ் 5, முசரபானி 3 விக்கெட் சாய்த்தனர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஜிம்பாப்வே அணி தேநீர் இடைவேளைக்கு பின், 57/1 ரன் எடுத்திருந்தது. பென் கர்ரான் (30), நிக் வெல்ச் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.