தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஜிம்பாப்வே அணி உலக சாதனை: 'டி-20'யில் 344 ரன் குவிப்பு

ஜிம்பாப்வே அணி உலக சாதனை: 'டி-20'யில் 344 ரன் குவிப்பு

ஜிம்பாப்வே அணி உலக சாதனை: 'டி-20'யில் 344 ரன் குவிப்பு


UPDATED : அக் 23, 2024 10:59 PM

ADDED : அக் 23, 2024 10:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2024 10:59 PM ADDED : அக் 23, 2024 10:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நைரோபி: சர்வதேச 'டி-20' போட்டியில் 344 ரன் குவித்த ஜிம்பாப்வே அணி புதிய உலக சாதனை படைத்தது.

இந்தியா, இலங்கையில், வரும் 2026ல் (பிப். 8 - மார்ச் 8) ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கான ஆப்ரிக்க அணிகள் பங்கேற்கும் தகுதிச் சுற்று கென்யாவில் நடக்கிறது. நைரோபியில் நடந்த லீக் போட்டியில் ஜிம்பாப்வே, காம்பியா அணிகள் மோதின.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஜிம்பாப்வே அணிக்கு கேப்டன் சிக்கந்தர் ராஜா (133* ரன், 43 பந்து, 15 சிக்சர், 7 பவுண்டரி) கைகொடுத்தார். ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 344 ரன் குவித்தது. கடின இலக்கை விரட்டிய காம்பியா அணி 14.4 ஓவரில் 54 ரன்னுக்கு சுருண்டு, 290 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

உலக சாதனைசர்வதேச 'டி-20' போட்டி அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் (344/4) குவித்த அணிகளுக்கான வரிசையில் முதலிடம் பிடித்தது ஜிம்பாப்வே. இதற்கு முன், நேபாளம் அணி 314/3 ரன் (எதிர்: மங்கோலியா, 2023) எடுத்திருந்தது. தவிர, சர்வதேச 'டி-20' போட்டியில் அதிக ரன் குவித்த, டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியானது ஜிம்பாப்வே. இதற்கு முன் இந்திய அணி 297/6 ரன் (எதிர்: வங்கம், 2024) எடுத்திருந்தது.* தவிர, சர்வதேச 'டி-20' போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் (290) இமாலய வெற்றியை பதிவு செய்த அணியானது ஜிம்பாப்வே. இதற்கு முன், நேபாளம் அணி 273 ரன் வித்தியாசத்தில் (எதிர்: மங்கோலியா, 2023) வெற்றி பெற்றிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us