/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அயர்லாந்து அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே அணி ஏமாற்றம்
/
அயர்லாந்து அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே அணி ஏமாற்றம்
அயர்லாந்து அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே அணி ஏமாற்றம்
அயர்லாந்து அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே அணி ஏமாற்றம்
ADDED : பிப் 16, 2025 09:10 PM

ஹராரே: இரண்டாவது ஒருநாள் போட்டியில் அசத்திய அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.
ஜிம்பாப்வே சென்றுள்ள அயர்லாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே வென்றது. இரண்டாவது போட்டி ஹராரேயில் நடந்தது. 'டாஸ்' வென்ற அயர்லாந்து 'பீல்டிங்' தேர்வு செய்தது.
ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் (30) நல்ல துவக்கம் கொடுத்தார். பென் கர்ரான் (18), கேப்டன் கிரேக் எர்வின் (4) நிலைக்கவில்லை. வெஸ்லி (61), சிக்கந்தர் ராஜா (58) அரைசதம் கடந்தனர். வெலிங்டன் மசகட்சா (35) ஓரளவு கைகொடுத்தார். ஜிம்பாப்வே அணி 49 ஓவரில் 245 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. அயர்லாந்து சார்பில் மார்க் அடேர் 4, கர்டிஸ் கேம்பர் 3 விக்கெட் சாய்த்தனர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு ஆன்டி பால்பிர்னி (11) சுமாரான துவக்கம் கொடுத்தார். அபாரமாக ஆடிய கேப்டன் பால் ஸ்டிர்லிங் (89), கர்டிஸ் கேம்பர் (63) ஜோடி நம்பிக்கை தந்தது. ஹாரி டெக்டர் (7) நிலைக்கவில்லை. பின் இணைந்த லோர்கன் டக்கர் (36*), ஜார்ஜ் டாக்ரெல் (20*) ஜோடி வெற்றிக்கு வித்திட்டது.
அயர்லாந்து அணி 47.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 249 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி பிப். 18ல் ஹராரேயில் நடக்கிறது.

