/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
லாவோசை வீழ்த்தியது இந்தியா * ஆசிய ஜூனியர் கால்பந்தில்...
/
லாவோசை வீழ்த்தியது இந்தியா * ஆசிய ஜூனியர் கால்பந்தில்...
லாவோசை வீழ்த்தியது இந்தியா * ஆசிய ஜூனியர் கால்பந்தில்...
லாவோசை வீழ்த்தியது இந்தியா * ஆசிய ஜூனியர் கால்பந்தில்...
ADDED : செப் 29, 2024 10:48 PM

வியன்டின்: ஆசிய கோப்பை (20 வயது) கால்பந்தில் இந்திய அணி 2-0 என லாவோசை வீழ்த்தியது.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2025ல் சீனாவில் (பிப். 6-23, 20 வயதுக்குட்பட்ட) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் 45 அணிகள் மோதுகின்றன. இந்திய அணி, 'ஜி' பிரிவில் ஈரான், மங்கோலியா, லாவோசுடன் இடம் பெற்றது. முதல் போட்டியில் மங்கோலியாவை 4-1 என வென்றது. இரண்டாவது போட்டியில் 0-1 என ஈரானிடம் தோற்றது.
நேற்று தனது கடைசி லீக் போட்டியில் லாவோவை எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் இந்திய அணியினர் சுதாரித்துக் கொண்டனர்.
போட்டியின் 69 வது நிமிடத்தில் இந்திய வீரர் கோயாரி, ஒரு கோல் அடித்தார். 62 வது நிமிடம் மாற்று வீரராக களமிறங்கிய காங்டே, 84வது நிமிடம் ஒரு கோல் அடித்து அசத்தினார். முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவது இடம்
'ஜி' பிரிவில் 3 போட்டியிலும் வென்ற ஈரான், 9 புள்ளியுடன் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுவிட்டது. 3 போட்டியில் 2 வெற்றி, 1 தோல்வியடைந்த இந்திய அணி, 6 புள்ளியுடன் இரண்டாவது இடம் பெற்றது. தவிர, மற்ற பிரிவுகளிலும் இரண்டாவது இடம் பெற்ற அணிகள் வரிசையில் இந்தியா, 6 வது இடத்தில் உள்ளது. மற்ற அணிகள் மோதும் போட்டிகளின் முடிவுக்கு ஏற்ப, இந்தியாவின் தகுதி குறித்து தெரியவரும்.