/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இந்தியா வருவாரா ரொனால்டோ * கோவாவுடன் அக். 22ல் பலப்பரீட்சை
/
இந்தியா வருவாரா ரொனால்டோ * கோவாவுடன் அக். 22ல் பலப்பரீட்சை
இந்தியா வருவாரா ரொனால்டோ * கோவாவுடன் அக். 22ல் பலப்பரீட்சை
இந்தியா வருவாரா ரொனால்டோ * கோவாவுடன் அக். 22ல் பலப்பரீட்சை
ADDED : ஆக 16, 2025 10:47 PM

கோவா: ஆசிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக், 'குரூப் ஸ்டேஜ் 2' தொடர் வரும் செப். 16 முதல் டிச. 24 வரை நடக்க உள்ளது. இந்தியாவில் நடந்த ஐ.எஸ்.எல்., தொடரின் சாம்பியன் மோகன் பகான், சூப்பர் கோப்பை வென்ற கோவா உட்பட மொத்தம் 32 அணிகள் பங்கேற்க உள்ளன.
இதற்கான போட்டி நடக்கும் இடங்கள், தேதி குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. 'டி' பிரிவில் கோவா அணி, போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பெற்ற சவுதி அரேபியாவின் அல் நாசர், ஈராக்கின் அல் ஜாவ்ரா, தஜிகிஸ்தானின் இஸ்திக்லால் என 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.
மோகன் பகான் அணி, 'சி பிரிவில் ஈரானின் செபான், ஜோர்டானின் அல் ஹுசைன், துர்க்மெனிஸ்தானின் அஹல் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 இரு முறை மோதும். இதன் படி கோவா, அல் நாசர் அணிகள், வரும் அக்டோபர் 22ல் படோர்டா (கோவா) மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. மீண்டும் நவம்பர் 5ல் ரியாத்தில் (சவுதி அரேபியா) நடக்கும் போட்டியில் இரு அணிகள் மீண்டும் மோத உள்ளன.
வருவது உறுதியா
இதனால் கோவாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க ரொனால்டோ இந்தியா வரலாம். இது இன்னும் உறுதியாகவில்லை. ஏனெனில் அன்னிய மண்ணில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க விலக்கு தர வேண்டும் என்ற அடிப்படையில் தான், அல் நாசர் அணியுடன் இவர், ஒப்பந்தம் செய்துள்ளார். தவிர போர்ச்சுகல் வீரர் ஜோவா பெலிக்ஸ், குரோஷியாவின் மார்செலோ புரோஜோவிச் என மற்ற முன்னணி வீரர்கள் இந்தியா வர காத்திருக்கின்றனர்.