ADDED : அக் 25, 2026 02:36 PM

ஓவியடோ: ஸ்பெயின் அரசின் உயரிய விளையாட்டு விருது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.
அர்ஜென்டினா கால்பந்து அணி முன்னாள் கேப்டன் மெஸ்ஸி 39. உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான ‘பாலன் டி ஆர்’ விருதை, 8 முறை வென்றுள்ளார். ஸ்பெயினில் பார்சிலோனா கிளப் அணிக்காக 21 ஆண்டுகள் விளையாடினார்.
கடந்த 2022 ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடரில் அசத்திய இவர், அர்ஜென்டினா அணிக்கு கோப்பை வென்று தந்தார். சமீபத்தில் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற இவர், கிளப் அரங்கில் மட்டும் விளையாடி வருகிறார்.
இதனிடையே கால்பந்து அரங்கில் மெஸ்ஸியின் சாதனை, பின்தங்கிய குழந்தைகளின் சுகாதாரம், கல்விக்கு உதவியதை போற்றும் வகையில், ஸ்பெயின் அரசு சார்பில் உயரிய ‘பிரின்சஸ் ஆப் அஸ்டுரியஸ்’ விளையாட்டு விருது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.
உலகின் மிகவும் மதிப்பு மிக்க இவ்விருதை, ஸ்பெயின் அரச குடும்பத்தினர் பங்கேற்ற விழாவில், இளவரசி லியோனர் வழங்கினார்.
ஸ்பெயினில் 1981 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. இதைப் பெற்ற முதல் கால்பந்து வீரர் என மெஸ்ஸி பெருமை பெற்றார்.
