/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
'யூரோ' கால்பந்து: பைனலில் இங்கிலாந்து
/
'யூரோ' கால்பந்து: பைனலில் இங்கிலாந்து
ADDED : ஜூலை 23, 2025 09:35 PM

ஜெனிவா: பெண்கள் 'யூரோ' கோப்பை கால்பந்து பைனலுக்கு இங்கிலாந்து அணி முன்னேறியது. அரையிறதியில் 2-1 என இத்தாலி அணியை வீழ்த்தியது.
சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கான 'யூரோ' கோப்பை கால்பந்து 14வது சீசன் நடக்கிறது. ஜெனிவாவில் நடந்த அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' இங்கிலாந்து, இத்தாலி அணிகள் மோதின. ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் பார்பரா போனான்சியா ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் இத்தாலி அணி 1-0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+6வது நிமிடம்) எழுச்சி கண்ட இங்கிலாந்து அணிக்கு மிச்செல் அகேமாங் ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.
பின், இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் அசத்திய இங்கிலாந்து அணிக்கு 119வது நிமிடத்தில் கெல்லி ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். இதற்கு இத்தாலி வீராங்கனைகளால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 4வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது.
இதற்கு முன் விளையாடிய 3 பைனலில், ஒரு முறை (2022) கோப்பை வென்ற இங்கிலாந்து, இரண்டு முறை (1984, 2009) 2வது இடம் பிடித்திருந்தது. மூன்றாவது முறையாக பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த இத்தாலி வீராங்கனைகள் கண்ணீருடன் விடை பெற்றனர்.