UPDATED : நவ 13, 2026 12:00 AM
ADDED : நவ 12, 2026 09:45 PM

* பெங்களூருவில், வரும் டிச. 17–20ல் ‘வேர்ல்டு டென்னிஸ் லீக்’ 5வது சீசன் நடக்கவுள்ளது. இதில் யூகி பாம்ப்ரி, சுமித் நாகல், மாயா ரேவதி, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.
* நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் பங்கேற்கிறது. நேற்று, ஆக்லாந்தில் நடந்த முதல் போட்டியில் ஏமாற்றிய இந்தியா 0–5 என தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டி நவ. 15ல் கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கவுள்ளது.
* ஆமதாபாத்தில், வரும் நவ. 30 முதல் டிச. 23 வரை பிரைம் வாலிபால் லீக் 5வது சீசன் நடக்கவுள்ளது. இதில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அர்ஜென்டினா அணியில் இடம் பிடித்திருந்த ஹெர்னான் பெடெரிகோ பெரேரா, தெலுங்கு பிளாக் ஹாக்ஸ் அணி சார்பில் பங்கேற்க உள்ளார்.
* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடருக்கான மும்பை சிட்டி அணியில், சுலோவேனியாவின் லுாகா மஜ்சென் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
