/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
பெல்ஜியம், ஜெர்மனி கலக்கல் * உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில்...
/
பெல்ஜியம், ஜெர்மனி கலக்கல் * உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில்...
பெல்ஜியம், ஜெர்மனி கலக்கல் * உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில்...
பெல்ஜியம், ஜெர்மனி கலக்கல் * உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில்...
ADDED : அக் 14, 2025 10:46 PM

பெல்பாஸ்ட்: உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் ஜெர்மனி, பெல்ஜியம் அணிகள் வெற்றி பெற்றன.
'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், 2026, ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. 48 அணிகள் பங்கேற்க உள்ளன. ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச்சுற்றில் 54 அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டியில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி உலக கோப்பை தொடருக்கு முன்னேறும்.வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்டில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ஜெர்மனி, வடக்கு அயர்லாந்து அணிகள் மோதின. நிக் வோல்ட்மேடு (31வது) அடித்த கோல் கைகொடுக்க, ஜெர்மனி 1-0 என வெற்றி பெற்றது.
பெல்ஜியம் அபாரம்
வேல்சின் கார்டிப்பில் நடந்த 'ஜே' பிரிவு போட்டியில் கொலம்பியா, வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. பெல்ஜியம் தரப்பில் டி புருய்ன் (18, 76), 'பெனால்டி' வாய்ப்பில் இரண்டு கோல் அடித்தார். மியுனியர் (24), டிரோசார்டு (90) தலா ஒரு கோல் அடித்தனர். வேல்ஸ் அணிக்கு ராடன் (8), பிராட்ஹெட் (89) கோல் அடித்தனர். முடிவில் பெல்ஜியம் அணி 4-2 என வெற்றி பெற்றது.
பாரிசில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் பிரான்ஸ், ஐஸ்லாந்து அணிகள் மோதின. இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
கேப் வெர்டே சாதனை
ஆப்ரிக்க அணிகளுக்கான தகுதிச்சுற்று 'டி' பிரிவில் 6 அணிகள் இடம் பெற்றன. இதன் கடைசி போட்டியில் கேப் வெர்டே அணி, 3-0 என எஸ்வதினி அணியை வென்றது. 10 போட்டியில் 7 வெற்றி, 2 'டிரா' (1 தோல்வி) செய்து, 23 புள்ளியுடன் முதலிடம் பிடித்தது. காமரூனை (19) பின் தள்ளியது.
இதையடுத்து 1930க்குப் பின், உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க தகுதி பெற்ற இரண்டாவது சிறிய அணி என பெருமை பெற்றது கேப் வேர்டே. இதன் மொத்த மக்கள் தொகை 5,25,000. கடந்த 2018ல் தகுதி பெற்ற ஐஸ்லாந்து (3,50,000 பேர்) முதலிடத்தில் உள்ளது.