/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
உக்ரைனை வென்றது பிரான்ஸ் * உலக கோப்பை தகுதிச்சுற்றில்...
/
உக்ரைனை வென்றது பிரான்ஸ் * உலக கோப்பை தகுதிச்சுற்றில்...
உக்ரைனை வென்றது பிரான்ஸ் * உலக கோப்பை தகுதிச்சுற்றில்...
உக்ரைனை வென்றது பிரான்ஸ் * உலக கோப்பை தகுதிச்சுற்றில்...
ADDED : செப் 06, 2025 10:40 PM

ஜெனிவா: உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் பிரான்ஸ் அணி 2-0 என உக்ரைனை வீழ்த்தியது.
'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், 2026, ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. 48 அணிகள் பங்கேற்க உள்ளன. ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச்சுற்றில் 54 அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டியில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி உலக கோப்பை தொடருக்கு முன்னேறும்.
நேற்று 'டி' பிரிவு போட்டிகள் நடந்தன. போலந்தில் நடந்த தனது முதல் தகுதிச்சுற்று போட்டியில் பிரான்ஸ் அணி, உக்ரைனை சந்தித்தது. 10 வது நிமிடம் மைக்கேல் ஒலிசே ஒரு கோல் அடித்தார். 82வது நிமிடத்தில் எம்பாப்பே, தன் பங்கிற்கு கோல் அடிக்க, பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
கடந்த இரு உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறாத இத்தாலி அணி, 5-0 என்ற கோல் கணக்கில் எஸ்தோனியாவை வீழ்த்தியது. கிரீஸ் அணி 5-1 என பெலாரசை வென்றது.