/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இத்தாலி 'திரில்' வெற்றி * உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில்...
/
இத்தாலி 'திரில்' வெற்றி * உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில்...
இத்தாலி 'திரில்' வெற்றி * உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில்...
இத்தாலி 'திரில்' வெற்றி * உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில்...
ADDED : செப் 09, 2025 09:34 PM

டெபிரிசென்: உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் கடைசி நிமிடத்தில் கோல் அடித்த இத்தாலி அணி, 5-4 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.
'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், 2026, ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. 48 அணிகள் பங்கேற்க உள்ளன. ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச்சுற்றில் 54 அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டியில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி உலக கோப்பை தொடருக்கு முன்னேறும். ஹங்கேரியில் நடந்த 'குரூப் 1' லீக் போட்டியில் இத்தாலி, இஸ்ரேல் அணிகள் மோதின. இஸ்ரேல் சார்பில் பெரெட்ஸ் (52, 89) இரண்டு கோல் அடித்தார்.
கடந்த இரு உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறாத இத்தாலி அணியின் லொகாடெல்லி (16), பஸ்டோனி (87) என இருவரும் 'சேம்சைடு' கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தனர்.
இருப்பினும் இத்தாலி வீரர் கியான் (40, 54) இரண்டு, பொலிடானோ (58), ராஸ்பதோரி (81) தலா ஒன்று என கோல் அடித்தனர். ஸ்கோர் 4-4 என இருந்தது. போட்டியின் கடைசி 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் இத்தாலி வீரர் டொனாலி (90+1) ஒரு கோல் அடிக்க, இத்தாலி அணி 5-4 என 'திரில்' வெற்றி பெற்றது. 9 புள்ளியுடன் பட்டியலில் 2வதாக உள்ளது.
* 'பி' பிரிவில் கொசோவாவிடம் 0-2 என சுவீடன் அணி தோற்றது. 2 போட்டியில் 1 புள்ளி மட்டும் பெற்று சிக்கலான நிலையில் உள்ளது. சுலோவேனியாவை 3-0 என வென்ற சுவிட்சர்லாந்து அணி, பட்டியலில் 'நம்பர்-1' ஆக உள்ளது.
* 'சி' பிரிவில் டென்மார்க் (3-0, எதிர்-கிரீஸ்), ஸ்காட்லாந்து (2-0, பெலாரஸ்) வெற்றி பெற்றன.
டுனிசியா தகுதி
ஆப்ரிக்க அணிகளுக்கான தகுதிச்சுற்றில் ('எச்' பிரிவு) டுனிசியா, கினியா மோதின. இதில் 1-0 என வென்ற டுனிசியா, 22 புள்ளியுடன் முதலிடத்தை உறுதி செய்து, உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
தவிர, அர்ஜென்டினா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரேசில் உட்பட இதுவரை 15 அணிகள் தகுதி பெற்றுள்ளன.