எஸ்கோபர் மீது கோபம் * உலக கால்பந்து கவுன்ட் டவுண் 11
எஸ்கோபர் மீது கோபம் * உலக கால்பந்து கவுன்ட் டவுண் 11
ADDED : ஜூன் 01, 2026 11:12 PM

அமெரிக்காவில் 1994ல் (ஜூன் 17 - ஜூலை 17) உலக கோப்பை தொடரின் 15வது சீசன் நடந்தது. 1938க்கு பின் மேற்கு, கிழக்கு ஜெர்மனி இணைந்து, ஒருங்கிணைந்த ஜெர்மனியாக களமிறங்கியது. அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியின் 35வது நிமிடத்தில் ஆன்ட்ரஸ் எஸ்கோபர், 'சேம்-சைடு' கோல் அடிக்க, கொலம்பியா அணி முதல் சுற்றோடு வெளியேறியது. இதனால் கோபமடைந்த கால்பந்து சூதாட்ட கும்பலை சேர்ந்த ஹம்பர்ட்டோ கேஸ்டிரோ என்பவர், கொலம்பியா திரும்பிய எஸ்கோபரை, 'பாரில்' வைத்து சுட்டுக் கொன்றார். இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாரடோனா நீக்கம்
அர்ஜென்டினாவின் மாரடோனா, உடல் எடையை குறைக்க ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட, தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர் இல்லாமல் தடுமாறிய அர்ஜென்டினா அணி 'ரவுண்டு-16' போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது.
முதல் அரையிறுதியில் பல்கேரியா, இத்தாலி அணிகள் மோதின. இதில் ராபர்ட்டோ பாகியோ இரண்டு கோல் அடிக்க இத்தாலி அணி 2-1 என வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் பிரேசில் அணி 1-0 என, சுவீடனை வென்றது.
நான்காவது கோப்பை
பைனலில் இத்தாலி, பிரேசில் அணிகள் மோதின. கூடுதல் நேரம் முடிந்தும், கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. உலக கோப்பை வரலாற்றில், முதன்முறையாக 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டது. இதில் பிரேசில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, நான்காவது முறையாக (1958, 1962, 1970, 1994) கோப்பை வென்றது.
'எக்ஸ்டிரா டைம்'
'சூப்பர்' பெக்கன்பர்
பெக்கன்பருக்கு ஒரு சிறப்பு உண்டு. 1974ல் கேப்டனாக இருந்து, மேற்கு ஜெர்மனி அணிக்கு உலக கோப்பை பெற்றுத் தந்தார். பின், 1990ல் மேற்கு ஜெர்மனி அணிக்கு பயிற்சியாளராக இருந்து, கோப்பை வென்று அசத்தினார். கேப்டன், பயிற்சியாளராக இருந்து தனது அணிக்கு உலக கோப்பை பெற்றுத்தந்த ஒரே நபர் பெக்கன்பர் தான்.
