தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/சுவீடனை வென்றது நார்வே * நட்பு கால்பந்து போட்டியில்...

சுவீடனை வென்றது நார்வே * நட்பு கால்பந்து போட்டியில்...

சுவீடனை வென்றது நார்வே * நட்பு கால்பந்து போட்டியில்...


ADDED : ஜூன் 02, 2026 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 10:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓஸ்லோ: நட்பு கால்பந்து போட்டியில் நார்வே அணி, 3-1 என சுவீடனை வீழ்த்தியது.

'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடக்க உள்ளது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்குத் தயாராகும் வகையில் பல்வேறு அணிகள் நட்பு போட்டியில் பங்கேற்கின்றன. நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடந்த போட்டில் நார்வே அணி, சுவீடனை எதிர்கொண்டது.

சொந்தமண் பலத்தில் அசத்திய நார்வே அணி, 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நார்வே சார்பில் 8, 37வது நிமிடத்தில் லார்சன் இரண்டு கோல் அடித்தார். நுசா (18) தன் பங்கிற்கு கோல் அடித்தார். சுவீடனின் அலெக்சாண்டர் இசாக் (76) ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.

கொலம்பியாவில் நடந்த போட்டியில் கொலம்பிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகா அணியை வீழ்த்தியது. கொலம்பிய அணிக்கு சான்செஸ் (17), லுாயிஸ் தியாஸ் (23), லுாயிஸ் சாரஸ் (81) தலா ஒரு கோல் அடித்தனர். கோஸ்டா ரிகா சார்பில் ஆன்ட்ரே சோடோ (33) ஆறுதல் தந்தார்.

மற்றொரு போட்டியில் சுலோவாகியா 2-1 என மால்டாவை வென்றது. துருக்கி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வடக்கு மாசிடோனியா அணியை வீழ்த்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us