/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கேரளாவுக்கு முதல் வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
/
கேரளாவுக்கு முதல் வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
ADDED : செப் 22, 2024 09:59 PM

கொச்சி: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் கேரளா அணி 2-1 என ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. கேரள மாநிலம கொச்சியில் நடந்த லீக் போட்டியில் கேரளா, ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 60வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியின் விஷ்ணு ஒரு கோல் அடித்தார். இதற்கு, 64வது நிமிடத்தில் கேரளாவின் நோவா சதாவ்ய் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அசத்திய கேரளா அணிக்கு 89வது நிமிடத்தில் குவாம் பெப்ரா ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி வரை போராடிய ஈஸ்ட் பெங்கால் அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.ஆட்டநேர முடிவில் கேரளா அணி 2-1 என்ற கணக்கில் முதல் வெற்றி பெற்றது.