/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இந்திய பெண்கள் அசத்தல் * ஆசிய கால்பந்து தொடருக்கு தகுதி
/
இந்திய பெண்கள் அசத்தல் * ஆசிய கால்பந்து தொடருக்கு தகுதி
இந்திய பெண்கள் அசத்தல் * ஆசிய கால்பந்து தொடருக்கு தகுதி
இந்திய பெண்கள் அசத்தல் * ஆசிய கால்பந்து தொடருக்கு தகுதி
ADDED : அக் 17, 2025 10:36 PM

பிஷ்கெக்: ஆசிய கால்பந்து தொடருக்கு இந்திய பெண்கள் (17 வயது) அணி தகுதி பெற்றது.
பெண்களுக்கான (17 வயதுக்கு உட்பட்ட) ஆசிய கால்பந்து 10வது சீசன், 2026ல் சீனாவில் (ஏப். 30-மே 17) நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் கிர்கிஸ்தானில் நடந்தன. 'ஜி' பிரிவில் நேற்று இந்தியா, உஸ்பெகிஸ்தான் மோதின.
போட்டியின் 38 வது நிமிடத்தில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை ஷக்ஜோடா ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 0-1 என பின்தங்கியது. இரண்டாவது பாதியில் 55 வது நிமிடத்தில் இந்திய அணியின் தண்டாமோனி கோல் அடிக்க. ஸ்கோர் 1-1 என ஆனது. 66 வது நிமிடத்தில் இந்தியாவின் அனுஷ்கா குமாரி, தனி நபராக பந்தை கொண்டு சென்று, கோல் அடித்தார்.
முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'ஜி' பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி (2 போட்டி, 2 வெற்றி, 6 புள்ளி) ஆசிய கால்பந்து தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது.
தொடரும் ஆதிக்கம்
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சீனியர் பிரிவு (2026, ஆஸி.,), 20 வயதுக்கு உட்பட்ட (2026, தாய்லாந்து), 17 வயதுக்கு உட்பட (2026, சீனா) என மூன்று வித ஆசிய கோப்பை தொடருக்கும் இந்திய பெண்கள் அணிகள் தகுதி பெற்றுள்ளன.