/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இந்தியா 136வது இடம்: சர்வதேச கால்பந்து தரவரிசையில்
/
இந்தியா 136வது இடம்: சர்வதேச கால்பந்து தரவரிசையில்
இந்தியா 136வது இடம்: சர்வதேச கால்பந்து தரவரிசையில்
இந்தியா 136வது இடம்: சர்வதேச கால்பந்து தரவரிசையில்
ADDED : அக் 17, 2025 10:14 PM

ஜூரிச்: கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 136வது இடம் பிடித்தது.
கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') வெளியிட்டது. இதில் இந்திய அணி (1096.65 புள்ளி), 134வது இடத்தில் இருந்து 136வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளில் இது தான் மிகவும் பின்தங்கிய இடம். இதற்கு முன், 2016ல் வெளியான தரவரிசையில் 137வது இடம் பிடித்திருந்தது. 1996ல் 94வது இடம் பெற்றது இந்தியாவின் சிறந்த தரவரிசையாக உள்ளது.
சமீபத்தில் உலக கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்ற ஆப்ரிக்காவின் கபோ வெர்டே அணி 71வது இடத்தில் உள்ளது. இந்நாட்டின் மக்கள் தொகை 5.27 லட்சம் தான். ஆனால் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய அணி, 136வது இடத்தில் உள்ளது ஏமாற்றம்.
ஸ்பெயின் 'நம்பர்-1': ஸ்பெயின் அணி 1880.76 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. 'உலக சாம்பியன்' அர்ஜென்டினா (1872.43), 2வது, பிரான்ஸ் (1862.71) 3வது இடத்தில் உள்ளன. அடுத்த இரு இடங்களில் இங்கிலாந்து (4வது, 1824.3), போர்ச்சுகல் (5வது, 1778) நீடிக்கின்றன. பிரேசில் அணி (1758.85) 7வது இடத்துக்கு தள்ளப்பட்டது. நெதர்லாந்து (1759.96) 6வது இடத்துக்கு முன்னேறியது.
ஜெர்மனி அணி (1713.3), 12வது இடத்தில் இருந்து 10வது இடத்தை கைப்பற்றியது. இத்தாலி அணி (1717.15) 9வது இடத்துக்கு முன்னேறியது. பெல்ஜியம் (1740.01) 8வது இடத்தில் தொடர்கிறது.