sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

பிரேசிலை வீழ்த்தியது ஜப்பான் * கால்பந்து அரங்கில் முதன் முறையாக...

/

பிரேசிலை வீழ்த்தியது ஜப்பான் * கால்பந்து அரங்கில் முதன் முறையாக...

பிரேசிலை வீழ்த்தியது ஜப்பான் * கால்பந்து அரங்கில் முதன் முறையாக...

பிரேசிலை வீழ்த்தியது ஜப்பான் * கால்பந்து அரங்கில் முதன் முறையாக...


ADDED : அக் 15, 2025 10:15 PM

Google News

ADDED : அக் 15, 2025 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டோக்கியோ: சர்வதேச கால்பந்து அரங்கில் ஜப்பான் அணி, முதன் முறையாக பிரேசிலை வீழ்த்தியது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த நட்பு கால்பந்து போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன பிரேசில், ஜப்பான் அணிகள் மோதின. முன்னதாக இரு அணிகள் மோதிய 9 போட்டியில், ஜப்பான் (7 தோல்வி, 2 'டிரா') ஒன்றில் கூட வென்றதில்லை.

இம்முறை 26 வது நிமிடத்தில் பிரேசிலின் ஹென்ரிக்யு, முதல் கோல் அடித்தார். அடுத்த 6வது நிமிடம் மார்டினெல்லி (32) ஒரு கோல் அடிக்க, பிரேசில் அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி எழுச்சி பெற்றது. 52வது நிமிடத்தில் மினமினோ ஒரு கோல் அடித்தார். 62 வது நிமிடம் சக வீரர் ஜுன்யா இடோ கொடுத்த பந்தை பெற்ற கெய்டோ நகமுரா, கோலாக மாற்றினார். ஸ்கோர் 2-2 என சமன் ஆனது. 71 வது நிமிடத்தில் மீண்டும் உதவிய இடோ, பந்தை அயசேக்கு கொடுத்தார். இதை அயசே கோல் அடித்து அசத்தினார்.

முடிவில் ஜப்பான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. சர்வதேச கால்பந்து அரங்கில் பிரேசிலை முதன் முறையாக வீழ்த்தியது.

கத்தார், சவுதி அரேபியா தகுதி

'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், 2026 ல் (ஜூன் 11-ஜூலை 19) நடக்க உள்ளது. 48 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆசிய அணிகளுக்கான நான்காவது கட்ட தகுதிச்சுற்று நடந்தது. சொந்தமண்ணில் கத்தார் அணி 2-1 என ஐக்கிய அரபு எமிரேட்சை ('ஏ' பிரிவு) வென்றது. 'பி' பிரிவில் சவுதி அரேபிய அணி, ஈராக்குடன் 'டிரா' (0-0) செய்தது. இரு பிரிவிலும் முதலிடம் பெற்ற கத்தார், சவுதி அரேபிய அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன.

* ஐரோப்பிய பிரிவு தகுதிச்சுற்றில் 54 அணிகள் பங்கேற்கின்றன. இதன் எப் பிரிவில் ரொனால்டோவின் போர்ச்சுகல், ஹங்கேரி அணிகள் மோதிய போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. ஸ்பெயின் (ஈ) 4-0 என பல்கேரியாவை வென்றது. இத்தாலி 3-0 என இஸ்ரேலை (ஐ) வீழ்த்தியது.






      Dinamalar
      Follow us