/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கால்பந்து: இந்திய பெண்கள் தோல்வி * ஈரான் அணியிடம் தோல்வி
/
கால்பந்து: இந்திய பெண்கள் தோல்வி * ஈரான் அணியிடம் தோல்வி
கால்பந்து: இந்திய பெண்கள் தோல்வி * ஈரான் அணியிடம் தோல்வி
கால்பந்து: இந்திய பெண்கள் தோல்வி * ஈரான் அணியிடம் தோல்வி
ADDED : அக் 21, 2025 11:01 PM

ஷில்லாங்: ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன், 2026, மார்ச் 1-26ல் (12 அணிகள்) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் அசத்திய இந்திய பெண்கள் அணி, முதன் முறையாக இத்தொடருக்கு தகுதி பெற்றது.
இதில் இந்திய அணி 'சி' பிரிவில் இடம் பெற்றது. 2011ல் உலக கோப்பை வென்ற, 2014, 2018ல் ஆசிய சாம்பியன் ஆன உலகின் 'நம்பர்-8' ஜப்பான், வியட்நாம் (37), சீன தைபே (42) என வலுவான அணிகள் இதில் உள்ளன.
இந்திய அணி தனது முதல் போட்டியில் வியட்நாம் (2026, மார்ச் 4) அணியை சந்திக்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் உலகத் தரவரிசையில் 63வது இடத்திலுள்ள இந்திய அணி, சொந்தமண்ணில் ஈரான் ('நம்பர்-73'), நேபாள (89) அணிகளுடன் இணைந்து முத்தரப்பு 'நட்பு' தொடரில் பங்கேற்கிறது.
முதல் போட்டி மேஹாலயாவின் ஷில்லாங்கில் நடந்தது. இந்தியா, ஈரான் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில், போட்டியின் 64 வது நிமிடம் ஈரான் வீராங்கனை சாரா திதார் ஒரு கோல் அடித்தார்.
74 வது நிமிடம் மீண்டும் அசத்திய சாரா, இரண்டாவது கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 0-2 என தோல்வியடைந்தது.