/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கோவா-அல் நாசர் பலப்பரீட்சை * ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில்
/
கோவா-அல் நாசர் பலப்பரீட்சை * ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில்
கோவா-அல் நாசர் பலப்பரீட்சை * ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில்
கோவா-அல் நாசர் பலப்பரீட்சை * ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில்
UPDATED : அக் 22, 2025 01:24 AM
ADDED : அக் 21, 2025 10:50 PM

கோவா: ஆசிய கிளப் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இன்று இந்தியாவின் கோவா, சவுதி அரேபியாவின் அல் நாசர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆசிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக், 'குரூப் ஸ்டேஜ் 2' தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் சூப்பர் கோப்பை வென்ற கோவா உட்பட 31 அணிகள் பங்கேற்க உள்ளன. 'டி' பிரிவில் கோவா அணி, போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பெற்ற சவுதி அரேபியாவின் அல் நாசர், ஈராக்கின் அல் ஜாவ்ரா, தஜிகிஸ்தானின் இஸ்திக்லால் என 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 இரு முறை மோதும்.
இன்று கோவாவின் படோர்டா மைதானத்தில் நடக்கும் போட்டியில் கோவா, அல் நாசர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் இரு போட்டியில் தோற்ற கோவா அணி, பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்று சொந்தமண்ணில் சிறப்பாக செயல்பட முயற்சிக்கலாம்.
ரொனால்டோ 'நோ'
அல் நாசர் அணியில் இடம் பெற்ற ரொனால்டோ இந்தியா வருவார் என நம்பப்பட்டது. ஆனால் அன்னிய மண்ணில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க தேவையில்லை என்ற ஒப்பந்தம் காரணமாக, ரொனால்டோ இல்லாத அணி இந்தியா வந்துள்ளது. இதில் ஸ்பெயினின் இனிகோ மார்டினஸ், பிரான்சின் கிங்ஸ்லே கோமன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சவால் கொடுக்க காத்திருக்கின்றனர்.