/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
மொராக்கோ அணி சாம்பியன்: ஜூனியர் உலக கால்பந்தில்
/
மொராக்கோ அணி சாம்பியன்: ஜூனியர் உலக கால்பந்தில்
ADDED : அக் 20, 2025 07:10 PM

சான்டியாகோ: ஜூனியர் உலக கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோ அணி சாம்பியன் ஆனது. பைனலில் 2-0 என, அர்ஜென்டினாவை வென்றது.
சிலியில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 24வது சீசன் நடந்தது. சான்டியாகோவில் நடந்த பைனலில் அர்ஜென்டினா, மொராக்கோ அணிகள் மோதின. அபாரமாக ஆடிய மொராக்கோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதற்கு முன், 2005ல் 4வது இடம் பிடித்திருந்தது. மொராக்கோ சார்பில் முகமது யாசிர் ஜாபிரி 2 கோல் (12, 29வது நிமிடம்) அடித்தார். கானா அணிக்கு பின் (2009) ஜூனியர் உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆப்ரிக்க அணியானது மொராக்கோ.
இத்தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் அர்ஜென்டினா (6 முறை), பிரேசில் (5) முதலிரண்டு இடத்தில் உள்ளன.