/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இங்கிலாந்து பெண்கள் கொண்டாட்டம் * யூரோ கால்பந்தில் மீண்டும் சாம்பியன்
/
இங்கிலாந்து பெண்கள் கொண்டாட்டம் * யூரோ கால்பந்தில் மீண்டும் சாம்பியன்
இங்கிலாந்து பெண்கள் கொண்டாட்டம் * யூரோ கால்பந்தில் மீண்டும் சாம்பியன்
இங்கிலாந்து பெண்கள் கொண்டாட்டம் * யூரோ கால்பந்தில் மீண்டும் சாம்பியன்
ADDED : ஜூலை 28, 2025 11:19 PM

பசல்: யூரோ கோப்பை கால்பந்து வெற்றியை, இங்கிலாந்து வீராங்கனைகள் இரண்டு நாள் கொண்டாடுகின்றனர்.
சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கான 'யூரோ' கோப்பை கால்பந்து 14வது சீசன் நடந்தது. 'நடப்பு சாம்பியன்' இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் பைனலுக்கு முன்னேறின. பசல் நகரில் நடந்த பைனல், 1-1 என சமனில் முடிந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி கூடுதல் நேரத்துக்கு சென்றது. இதில் இரு அணி தரப்பிலும் யாரும் கோல் அடிக்கவில்லை.
இதையடுத்து, 'பெனால்டி ஷூட் அவுட்' நடந்தது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்பு தரப்பட்டன. இங்கிலாந்து சார்பில் கிரீன்உட், நியா சார்லஸ், கெல்லி கோல் அடித்தனர். ஸ்பெயின் தரப்பில் பாட்ரிசியா மட்டும் கோல் அடித்தார். சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து கோல் கீப்பர் ஹன்னா, ஸ்பெயின் வீராங்கனைகள் மரியோனா, பொன்மதி, சல்மா அடித்த பந்துகளை தடுத்து அசத்தினார்.
முடிவில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக யூரோ கோப்பை கைப்பற்றியது. இங்கிலாந்து அணிக்கு ரூ. 17.34 கோடி பரிசு கிடைத்தது. ஸ்பெயின் அணிக்கு 8.67 கோடி தரப்பட்டது.
தொடரும் கொண்டாட்டம்
அன்னிய மண்ணில் நடந்த பெரிய தொடரில் சாதித்த முதல் இங்கிலாந்து அணி என பெருமை பெற்றது. இதையடுத்து, இந்த வெற்றியை பெரிய அளவில் கொண்டாட முடிவு செய்துள்ளனர். இங்கிலாந்தின் டவுனிங் தெருவில் ரசிகர்கள் முன்னிலையில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளனர். துணை பிரதமர் ஏஞ்சலா ரேனர், விளையாட்டு அமைச்சர் ஸ்டெபானியே வரவேற்பு தருகின்றனர்.
மறுநாள், மத்திய லண்டனில் இருந்து திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக செல்லும் இங்கிலாந்து வீராங்கனைகள், பக்கிங்ஹாம் அரண்மனையை அடைகின்றனர்.

