/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கால்பந்து: சாதிக்குமா இந்தியா * மீண்டும் களமிறங்கும் சுனில் செத்ரி
/
கால்பந்து: சாதிக்குமா இந்தியா * மீண்டும் களமிறங்கும் சுனில் செத்ரி
கால்பந்து: சாதிக்குமா இந்தியா * மீண்டும் களமிறங்கும் சுனில் செத்ரி
கால்பந்து: சாதிக்குமா இந்தியா * மீண்டும் களமிறங்கும் சுனில் செத்ரி
ADDED : மார் 18, 2025 11:11 PM

ஷில்லாங்: நட்பு கால்பந்து போட்டியில் இன்று இந்தியா, மாலத்தீவு மோதுகின்றன. சுனில் செத்ரி மீண்டும் களமிறங்க உள்ளார்.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்று இம்மாதம் நடக்க உள்ளது. மொத்தம் 24 அணிகள், ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடக்கும், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கலாம்.
உலகத் தரவரிசையில் 126 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. மார்ச் 25ல் தனது முதல் போட்டியில் 185 வது இடத்திலுள்ள வங்கதேசத்தை சந்திக்க உள்ளது.
நட்பு போட்டி
இதற்குத் தயாராகும் வகையில் இந்திய அணி, 162வது இடத்திலுள்ள மாலத்தீவுடன் நட்பு போட்டியில் பங்கேற்கிறது. இப்போட்டி முதன் முறையாக மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள நேரு மைதானத்தில் நடக்க உள்ளது.
செத்ரி வருகை
இப்போட்டியில் முன்னாள் கேப்டன் சுனில் செத்ரி 40, பங்கேற்கிறார். கடந்த 2024, ஜூன் மாதம், இவர் ஓய்வு பெற்றபின், இந்திய அணி பங்கேற்ற 11 போட்டியில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.
தற்போது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று சுனில் செத்ரி மீண்டும் அணிக்கு திரும்பியது, சக வீரர்களுக்கு உற்சாகம் தந்துள்ளது. இந்திய அணிக்காக அதிக கோல் அடித்த வீரரான சுனில் செத்ரி (151 போட்டி, 94 கோல்), மீண்டும் கோல் கணக்கை தொடரலாம்.
இதுகுறித்து இந்திய அணி பயிற்சியாளர் மனோலா மார்குயஸ் கூறியது:
முதன் முறையாக ஷில்லாங்கில் இந்திய அணி விளையாட உள்ளது. இது நட்பு போட்டியாக இருந்தாலும், நாங்கள் வெற்றி பெறவே விரும்புகிறோம். சுனில் செத்ரி போட்டியின் துவக்கத்தில் இருந்து விளையாடுவாரா அல்லது இரண்டாவது பாதியில் களமிறங்குவாரா எனத் தெரியாது. 6 மாற்று வீரர்களை களமிறக்க உள்ளோம். இதில் சுனில் செத்ரியும் இடம் பெறுவார்.
இவ்வாறு அவர் என்றார்.