/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
பி.எஸ்.ஜி., அணிக்கு பிரெஞ்ச் கோப்பை: விடைபெற்றார் எம்பாப்வே
/
பி.எஸ்.ஜி., அணிக்கு பிரெஞ்ச் கோப்பை: விடைபெற்றார் எம்பாப்வே
பி.எஸ்.ஜி., அணிக்கு பிரெஞ்ச் கோப்பை: விடைபெற்றார் எம்பாப்வே
பி.எஸ்.ஜி., அணிக்கு பிரெஞ்ச் கோப்பை: விடைபெற்றார் எம்பாப்வே
ADDED : மே 26, 2024 09:23 PM

பாரிஸ்: பிரெஞ்ச் கோப்பையை வென்றது பி.எஸ்.ஜி., அணி. விறுவிறுப்பான பைனலில் லியான் அணியை வீழ்த்தியது.
பிரான்சில் கிளப் அணிகள் மோதும் பிரெஞ்ச் கோப்பை கால்பந்து தொடரின் பைனல் நடந்தது. இதில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,), லியான் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் நுனோ மென்டஸ் கொடுத்த பந்தை பெற்ற பி.எஸ்.ஜி., அணியின் டெம்பலே, தலையால் முட்டி முதல் கோல் அடித்தார். 34வது நிமிடத்தில் பேபியன் ரியுஸ் ஒரு கோல் அடிக்க, பி.எஸ்.ஜி., அணி 2-0 என வலுவான முன்னிலை பெற்றது. பின் 55வது நிமிடத்தில் லியான் அணிக்கு ஜேக் ஓ பிரையன் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். இறுதியில் பி.எஸ்.ஜி., அணி 2-1 என வெற்றி பெற்று, பிரெஞ்ச் கோப்பையை தட்டிச் சென்றது.
எம்பாப்வே முயற்சி
பி.எஸ்.ஜி., அணிக்காக தனது கடைசி போட்டியில் பங்கேற்ற பிரான்ஸ் கேப்டன் எம்பாப்வேயின் கோல் அடிக்கும் முயற்சிகள் இரு முறை (20, 41வது நிமிடம்) வீணாகின. இருப்பினும் கோப்பை வென்ற மகிழ்ச்சியுடன் விடைபெற்றார். சிறந்த முன்கள வீரரான இவர், பி.எஸ்.ஜி., அணிக்காக அதிக கோல் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் (308 போட்டி, 256 கோல்) உள்ளார். 7 சீசனில் விளையாடி, 15 கோப்பை வென்று கொடுத்துள்ளார். அடுத்து, ரியல் மாட்ரிட் கிளப் அணிக்கு மாற திட்டமிட்டுள்ளார்.