/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இந்தியா 'நம்பர்-117': கால்பந்து தரவரிசையில் பின்னடைவு
/
இந்தியா 'நம்பர்-117': கால்பந்து தரவரிசையில் பின்னடைவு
இந்தியா 'நம்பர்-117': கால்பந்து தரவரிசையில் பின்னடைவு
இந்தியா 'நம்பர்-117': கால்பந்து தரவரிசையில் பின்னடைவு
ADDED : பிப் 15, 2024 10:41 PM

புதுடில்லி: 'பிபா' உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 117வது இடத்துக்கு பின்னடைவு.
கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') வெளியிட்டது. இதில் இந்திய அணி 102வது இடத்தில் இருந்து 117வது இடத்துக்கு முன்னேறியது. சமீபத்தில் முடிந்த ஆசிய கோப்பையில் ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், சிரியாவிடம் வீழ்ந்த இந்தியா, லீக் சுற்றோடு திரும்பியது. இது, 2017க்கு பின் இந்தியாவின் மோசமான தரவரிசையானது. கடந்த 2017, ஜனவரியில் வெளியான தரவரிசையில் இந்திய அணி 129வது இடம் பிடித்திருந்தது. கடந்த 2015ல் வெளியான ரேங்கிங்கில் 173வது இடம் பிடித்தது இந்தியாவின் மோசமான தரவரிசையாக உள்ளது.
'டாப்-10' வரிசையில் 'நடப்பு உலக சாம்பியன்' அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம், பிரேசில், நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி, குரோஷியா அணிகள் நீடிக்கின்றன.

