/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்
/
இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்
இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்
இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்
ADDED : ஜூலை 20, 2024 11:07 PM

புதுடில்லி: இந்திய கால்பந்து அணி புதிய பயிற்சியாளராக மனோலோ மார்கஸ் நியமிக்கப்பட்டார்.
இந்திய கால்பந்து அணி பயிற்சியாளராக குரோஷியாவில் இகோர் ஸ்டிமாக் (5 ஆண்டு) இருந்தார். கடைசியாக 2026 உலக கோப்பை தொடருக்கான ஆசிய பிரிவில் இந்திய அணி தோற்று வெளியேறியது. இதையடுத்து பதவிக்காலம் முடியும் முன்பே, ஸ்டிமாக் நீக்கப்பட்டார்.
தற்போது, அகில இந்திய கால்பந்து சங்கம் (ஏ.ஐ.எப்.எப்.,) புதிய பயிற்சியாளராக, ஸ்பெயினை சேர்ந்த மனோலோ மார்கசை 55, நியமித்துள்ளது. ஸ்பெயினில் லாஸ் பால்மாஸ் உட்பட பல அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்தார்.
2020 முதல் இந்தியாவில் ஐ.எஸ்.எல்., தொடரில் பயிற்சியாளராக உள்ளார். இவரது தலைமையில் 2021-211ல் ஐதராபாத், கோப்பை வென்றது. 2023 முதல் கோவா அணி பயிற்சியாளராக உள்ளார். தற்போது, 3 ஆண்டு ஒப்பந்தத்தில் இந்திய அணியில் இணைந்துள்ளார்.
அவர் கூறியது:
இந்திய கால்பந்து அணி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது பெருமையாக உள்ளது. எனது இரண்டாவது தாய்வீடு போன்றது இந்தியா. இந்தியாவின் லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், என்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டு வெற்றியை கொண்டு வருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

