sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

இன்டர் மிலன் முதல் வெற்றி: கிளப் உலக கோப்பை கால்பந்தில்

/

இன்டர் மிலன் முதல் வெற்றி: கிளப் உலக கோப்பை கால்பந்தில்

இன்டர் மிலன் முதல் வெற்றி: கிளப் உலக கோப்பை கால்பந்தில்

இன்டர் மிலன் முதல் வெற்றி: கிளப் உலக கோப்பை கால்பந்தில்


ADDED : ஜூன் 22, 2025 05:39 PM

Google News

ADDED : ஜூன் 22, 2025 05:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சியாட்டில்: கிளப் உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் இன்டர் மிலன் அணி முதல் வெற்றி பெற்றது.

அமெரிக்காவில், உலகின் முன்னணி கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் 'பிபா' உலக கோப்பை 21வது சீசன் நடக்கிறது. மொத்தம் 32 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

சியாட்டில் நகரில் நடந்த 'இ' பிரிவு லீக் போட்டியில் இன்டர் மிலன் (இத்தாலி), உராவா ரெட் டைமண்ட்ஸ் (ஜப்பான்) அணிகள் மோதின. இதில் இன்டர் மிலன் அணி 2-1 என்ற கணக்கில், இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இன்டர் மிலன் சார்பில் ஜேவியர் மார்டினெஸ் (78வது நிமிடம்), கார்போனி (90+2வது) தலா ஒரு கோல் அடித்தனர். உராவா அணிக்கு ரியோமா (11வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.

ரிவர் பிளேட் (அர்ஜென்டினா), மான்டேரி (மெக்சிகோ) அணிகள் மோதிய மற்றொரு 'இ' பிரிவு லீக் போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.

டார்ட்மண்ட் வெற்றி: சின்சினாட்டியில் நடந்த 'எப்' பிரிவு லீக் போட்டியில் மாமெலோடி சன்டவுன்ஸ் (தென் ஆப்ரிக்கா), போருசியா டார்ட்மண்ட் (ஜெர்மனி) அணிகள் மோதின. இதில் டார்ட்மண்ட் அணி 3-2 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.

மற்றொரு 'எப்' பிரிவு லீக் போட்டியில் புளுமினென்ஸ் (பிரேசில்) அணி 4-2 என உல்சன் அணியை (தென் கொரியா) வீழ்த்தியது.






      Dinamalar
      Follow us