/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை ஆறுதல் வெற்றி
/
ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை ஆறுதல் வெற்றி
UPDATED : மார் 10, 2025 12:21 AM
ADDED : மார் 07, 2025 10:58 PM

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் அசத்திய சென்னை அணி 5-2 என, ஜாம்ஷெட்பூர் அணியை வென்றது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இது, நடப்பு சீசனில் சென்னை அணி பங்கேற்ற கடைசி போட்டி. அபாரமாக ஆடிய சென்னை அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது.
சென்னை அணி சார்பில் டேனியல் சிமா (25, 90+6வது நிமிடம்), இர்பான் யாத்வாட் (57, 90வது) தலா 2, லுாகாஸ் பிரம்பில்லா (45+3வது) ஒரு கோல் அடித்தனர். ஜாம்ஷெட்பூர் அணிக்கு ரீ டச்சிகாவா (18வது நிமிடம்), முகமது சனான் (62வது) தலா ஒரு கோல் அடித்தனர்.
சென்னை அணி 24 போட்டியில், 7 வெற்றி, 6 'டிரா', 11 தோல்வி என 27 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது.
ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறிய ஜாம்ஷெட்பூர் அணி 38 புள்ளிகளுடன் (12 வெற்றி, 2 'டிரா', 10 தோல்வி) 5வது இடத்தில் உள்ளது.