/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
மெஸ்ஸி 'ஹாட்ரிக்': மயாமி வெற்றி
/
மெஸ்ஸி 'ஹாட்ரிக்': மயாமி வெற்றி
ADDED : அக் 19, 2025 05:50 PM

நாஷ்வில்லி: மேஜர் லீக் கால்பந்து போட்டியில் மெஸ்ஸி 'ஹாட்ரிக்' கோல் அடிக்க, இன்டர் மயாமி அணி வெற்றி பெற்றது.
அமெரிக்கா, கனடாவில், மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) 30வது சீசன் நடக்கிறது. நாஷ்வில்லி நகரில் நடந்த 'பிளே-ஆப்' சுற்று முதல் போட்டியில் இன்டர் மயாமி, நாஷ்வில்லி அணிகள் மோதின. இதில் மெஸ்ஸி 'ஹாட்ரிக்' கோல் (35, 63, 81வது நிமிடம்) அடித்து கைகொடுக்க இன்டர் மயாமி அணி 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இது, எம்.எல்.எஸ்., கால்பந்து அரங்கில் மெஸ்ஸியின் 2வது 'ஹாட்ரிக்' கோல் ஆனது. இதற்கு முன், கடந்த ஆண்டு புதிய இங்கிலாந்து புரட்சி அணிக்கு எதிராக 'ஹாட்ரிக்' கோல் அடித்திருந்தார்.
இதுவரை விளையாடிய 34 போட்டியில், 19 வெற்றி, 8 'டிரா', 7 தோல்வி என, 65 புள்ளிகளுடன் இன்டர் மயாமி அணி 3வது இடத்தில் உள்ளது. முதலிரண்டு இடங்களில் பிலாடெல்பியா (66 புள்ளி), சின்சினாட்டி (65) அணிகள் உள்ளன.
'கோல்டன் பூட்' விருது
இத்தொடரில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி, முதலிடத்தில் உள்ளார். இதுவரை 29 கோல் அடித்துள்ளார். தவிர இவர், சகவீரர்கள் கோல் அடிக்க 19 முறை 'அசிஸ்ட்' செய்துள்ளார். இதனையடுத்து அதிக கோல் அடித்தவருக்கான 'கோல்டன் பூட்' விருதை முதன்முறையாக பெறுகிறார் மெஸ்ஸி. இத்தொடரில் 4 ஆண்டுகளுக்கு பின் இவ்விருதை பெறும் அர்ஜென்டினா வீரரானார். 2021ல் நியூயார்க் சிட்டி அணிக்காக விளையாடிய அர்ஜென்டினாவின் வாலன்டின் காஸ்டெல்லானோஸ் இவ்விருதை வென்றிருந்தார்.