/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
மெஸ்சி 'மேஜிக்': மயாமி வெற்றி
/
மெஸ்சி 'மேஜிக்': மயாமி வெற்றி
ADDED : ஆக 17, 2025 10:13 PM

போர்ட் லாடர்டேல்: எம்.எல்.எஸ்., லீக் போட்டியில் மெஸ்சி ஒரு கோல் அடித்து கைகொடுக்க இன்டர் மயாமி அணி 3-1 என வெற்றி பெற்றது.
அமெரிக்காவில், மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) 30வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இன்டர் மயாமி, லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்ஸி அணிகள் மோதின. இதில் காயத்தில் இருந்து மீண்ட மயாமி அணியின் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்சி பங்கேற்றார்.
ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் ஆல்பா ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் மயாமி அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 59வது நிமிடத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியின் பெயின்ட்சில் ஒரு கோல் அடித்தார். பின் எழுச்சி கண்ட மெஸ்சி, 84வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து, 2-1 என முன்னிலை பெற்றுத்தந்தார். தொடர்ந்து அசத்திய இவர், 89வது நிமிடத்தில் சகவீரர் லுாயிஸ் சாரஸ் கோல் அடிக்க 'அசிஸ்ட்' செய்தார். ஆட்டநேர முடிவில் இன்டர் மயாமி அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
எம்.எல்.எஸ்., தொடரின் நடப்பு சீசனில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்சி முதலிடத்தில் நீடிக்கிறார். இதுவரை 19 கோல் அடித்துள்ளார்.