/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
மோகன் பகான் அணி வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
/
மோகன் பகான் அணி வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
ADDED : அக் 19, 2024 09:59 PM

கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் மோகன் பகான் அணி 2-0 என ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மோகன் பகான் அணி சார்பில் ஜேமி மக்லாரன் (41வது நிமிடம்), டிமிட்ரி பெட்ராடோஸ் (89வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். மோகன் பகான் அணி, இதுவரை 5 போட்டியில், 3 வெற்றி, ஒரு 'டிரா', ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. ஈஸ்ட் பெங்கால் அணி தொடர்ச்சியாக 5வது தோல்வியை பதிவு செய்தது.
மும்பை வெற்றி: கோவாவில் நடந்த லீக் போட்டியில் மும்பை, கோவா அணிகள் மோதின. மும்பை அணிக்கு நிகோலாஸ் கரேலிஸ் (21வது நிமிடம்), யோல் வான் நீப் (40வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். 55வது நிமிடத்தில் கோவா அணிக்கு கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் அர்மான்டோ சாதிகு ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். முடிவில் மும்பை அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இது, இந்த சீசனில் மும்பை அணியின் முதல் வெற்றியானது.

