/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
மோகன் பகான் 'சாம்பியன்': ஐ.எப்.ஏ., 'ஷீல்டு' கால்பந்தில்
/
மோகன் பகான் 'சாம்பியன்': ஐ.எப்.ஏ., 'ஷீல்டு' கால்பந்தில்
மோகன் பகான் 'சாம்பியன்': ஐ.எப்.ஏ., 'ஷீல்டு' கால்பந்தில்
மோகன் பகான் 'சாம்பியன்': ஐ.எப்.ஏ., 'ஷீல்டு' கால்பந்தில்
ADDED : அக் 19, 2025 05:46 PM

கோல்கட்டா: ஐ.எப்.ஏ., 'ஷீல்டு' கால்பந்து தொடரில் மோகன் பகான் அணி சாம்பியன் ஆனது. பைனலில், 5-4 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.
கோல்கட்டாவில், இந்திய கால்பந்து சங்கம் (ஐ.எப்.ஏ.,) சார்பில் 'ஷீல்டு' கால்பந்து 125வது சீசன் நடந்தது. இதன் பைனலில் ஈஸ்ட் பெங்கால், மோகன் பகான் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி கூடுதல் நேர முடிவில் 1-1 என சமநிலையில் இருந்தது. ஹமீத் அஹாதத் (ஈஸ்ட் பெங்கால், 36வது நிமிடம்), லாலெங்மாவியா ரால்தே (மோகன் பகான், 45+3வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர்.
போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் அசத்திய மோகன் பகான் அணி 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 21வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. தவிர, 22 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரில் கோப்பை வென்றது. கடைசியாக 2003ல் சாம்பியன் ஆனது. இத்தொடரில் அதிகமுறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது மோகன் பகான். முதலிடத்தில் ஈஸ்ட் பெங்கால் (28 முறை) உள்ளது.