/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கேரளாவை வீழ்த்தியது மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் அசத்தல்
/
கேரளாவை வீழ்த்தியது மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் அசத்தல்
கேரளாவை வீழ்த்தியது மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் அசத்தல்
கேரளாவை வீழ்த்தியது மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் அசத்தல்
ADDED : நவ 03, 2024 10:00 PM

மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் மும்பை அணி 4-2 என கேரளாவை வீழ்த்தியது. மற்றொரு லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட் அணி 3-2 என ஒடிசா அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. அசாமின் கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட், ஒடிசா அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய வடகிழக்கு அணிக்கு அஜராய், 2 கோல் (12, 40வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார். இதற்கு ஒடிசா அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் வடகிழக்கு அணி 2-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஒடிசா அணிக்கு 60வது நிமிடத்தில் அத்னன் ஹுகோ போமஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 71வது நிமிடத்தில் வடகிழக்கு அணியின் கில்லர்மோ பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார். தொடர்ந்து போராடிய ஒடிசா அணிக்கு 83வது நிமிடத்தில் தியாகோ மொரிசியோ ஒரு கோல் அடித்தார்.
ஆட்டநேர முடிவில் வடகிழக்கு யுனைடெட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மும்பை வெற்றிமும்பையில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் மும்பை, கேரளா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய மும்பை அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.