sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

காலிறுதியில் போர்ச்சுகல்: ரொனால்டோ அசத்தல்

/

காலிறுதியில் போர்ச்சுகல்: ரொனால்டோ அசத்தல்

காலிறுதியில் போர்ச்சுகல்: ரொனால்டோ அசத்தல்

காலிறுதியில் போர்ச்சுகல்: ரொனால்டோ அசத்தல்


ADDED : நவ 16, 2024 10:07 PM

Google News

ADDED : நவ 16, 2024 10:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போர்டோ: நேஷன்ஸ் லீக் கால்பந்து காலிறுதிக்கு போர்ச்சுகல் அணி முன்னேறியது. லீக் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் அடித்து கைகொடுக்க போர்ச்சுகல் அணி 5-1 என போலந்தை வீழ்த்தியது.

ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. போர்ச்சுகலில் நடந்த 'குரூப்-1' லீக் போட்டியில் போர்ச்சுகல், போலந்து அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுகல் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போர்ச்சுகல் அணிக்கு கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் (72, 87வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார். ஒட்டுமொத்த கால்பந்து அரங்கில் ரொனால்டோ, 910 கோல் அடித்துள்ளார்.

இதுவரை விளையாடிய 5 போட்டியில், 4 வெற்றி, ஒரு 'டிரா' என 13 புள்ளிகளுடன் 'குரூப்-1' பிரிவில் முதலிடத்தை உறுதி செய்த போர்ச்சுகல் அணி காலிறுதிக்குள் நுழைந்தது.

கிளாஸ்கோவில் நடந்த மற்றொரு 'குரூப்-1' லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 1-0 என குரோஷியாவை வென்றது. 'குரூப்-4' லீக் போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என டென்மார்க்கை வீழ்த்தியது. சுவிட்சர்லாந்து, செர்பியா அணிகள் மோதிய 'குரூப்-4' லீக் போட்டி 1-1 என 'டிரா' ஆனது.

இத்தொடரில் போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி அணிகள் காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்துள்ளன.






      Dinamalar
      Follow us