/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
அரையிறுதியில் ரியல் மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் கலக்கல்
/
அரையிறுதியில் ரியல் மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் கலக்கல்
அரையிறுதியில் ரியல் மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் கலக்கல்
அரையிறுதியில் ரியல் மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் கலக்கல்
ADDED : ஏப் 18, 2024 10:45 PM

மான்செஸ்டர்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு ரியல் மாட்ரிட் அணி முன்னேறியது. காலிறுதியில் 4-3 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தியது.
ஐரோப்பிய கிளப் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து 69வது சீசன் நடக்கிறது. இரண்டு சுற்றுகளாக நடந்த காலிறுதியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), 'நடப்பு சாம்பியன்' மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணிகள் மோதின. மாட்ரிட்டில் நடந்த முதல் சுற்று போட்டி 3-3 என 'டிரா' ஆனது.
இவ்விரு அணிகள் மோதிய இரண்டாவது சுற்று போட்டி மான்செஸ்டரில் நடந்தது. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என 'டிரா' ஆனது.
இரண்டு சுற்றுகளின் முடிவில் போட்டி 4-4 என சமநிலை வகித்தது. பின் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. இதில் அபாரமாக ஆடிய ரியல் மாட்ரிட் அணி 4-3 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
மற்றொரு காலிறுதியில் பேயர்ன் முனிக் (ஜெர்மனி) அணி 3-2 என ஆர்சனல் (இங்கிலாந்து) அணியை வீழ்த்தியது. இரண்டு சுற்றுகளாக நடக்கும் அரையிறுதியில் (ஏப். 30, மே 8) ரியல் மாட்ரிட், பேயர்ன் முனிக் அணிகள் மோதுகின்றன. மற்றொரு அரையிறுதியில் (மே 1, 7) பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிரான்ஸ்), போருசியா டார்ட்மண்ட் (ஜெர்மனி) அணிகள் விளையாடுகின்றன.

