/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
சண்டிகரை வென்றது தமிழகம் * தேசிய பெண்கள் கால்பந்து தொடரில்...
/
சண்டிகரை வென்றது தமிழகம் * தேசிய பெண்கள் கால்பந்து தொடரில்...
சண்டிகரை வென்றது தமிழகம் * தேசிய பெண்கள் கால்பந்து தொடரில்...
சண்டிகரை வென்றது தமிழகம் * தேசிய பெண்கள் கால்பந்து தொடரில்...
ADDED : மே 08, 2024 10:28 PM

புதுடில்லி: பெண்களுக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 2-0 என சண்டிகர் அணியை வென்றது.
இந்தியாவில் சீனியர் பெண்களுக்கான 28 வது தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. மொத்தம் 30 அணிகள் களமிறங்கின. தற்போது 12 அணிகள் பங்கேற்கும் பைனல் சுற்று நடக்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நேற்று 'ஏ' பிரிவு போட்டிகள் நடந்தன. தமிழக பெண்கள் அணி, சண்டிகரை சந்தித்தது. போட்டி துவங்கிய 2வது நிமிடத்தில் தமிழக வீராங்கனை சந்தியா, முதல் கோல் அடித்து கைகொடுத்தார்.
தொடர்ந்து அசத்திய இவர், போட்டியின் 44வது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்தார். முடிவில் தமிழக அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் பஞ்சாப் அணி 2-3 என டில்லியிடம் தோல்வியடைந்தது. மேற்கு வங்க அணி 3-1 என ரயில்வேஸ் அணியை சாய்த்தது.
இதுவரை நடந்த போட்டியின் முடிவில் தமிழக அணி 4 போட்டியில் 3 வெற்றி, 1 'டிரா' செய்து, 10 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்க அணி 9 புள்ளியுடன் (4ல் 3 வெற்றி, 1 தோல்வி) இரண்டாவது இடத்தில் உள்ளது.

