/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
பிரேசிலை வென்றது உருகுவே: கோபா அமெரிக்கா கால்பந்தில்
/
பிரேசிலை வென்றது உருகுவே: கோபா அமெரிக்கா கால்பந்தில்
பிரேசிலை வென்றது உருகுவே: கோபா அமெரிக்கா கால்பந்தில்
பிரேசிலை வென்றது உருகுவே: கோபா அமெரிக்கா கால்பந்தில்
ADDED : ஜூலை 07, 2024 11:58 PM

நெவாடா: 'கோபா அமெரிக்கா' கால்பந்து காலிறுதியில் உருகுவே அணி 4-2 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் பிரேசிலை வீழ்த்தியது.
அமெரிக்காவில் 'கோபா அமெரிக்கா' கால்பந்து 48வது சீசன் நடக்கிறது. இதன் காலிறுதியில் பிரேசில், உருகுவே அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. பின் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் (தலா 15 நிமிடம்) இரு அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை. போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் உருகுவே அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. பிரேசில் அணி பரிதாபமாக வெளியேறியது.
அரிசோனாவில் நடந்த மற்றொரு காலிறுதியில் பனாமா, கொலம்பியா அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த கொலம்பிய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
அரையிறுதியில் அர்ஜென்டினா - கனடா (ஜூலை 9, இடம்: நியூ ஜெர்சி), உருகுவே - கொலம்பியா (ஜூலை 10, இடம்: நார்த் கரோலினா) அணிகள் மோதுகின்றன.