/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
மேற்கு வங்கம், சர்வீசஸ் வெற்றி: சந்தோஷ் டிராபி கால்பந்தில்
/
மேற்கு வங்கம், சர்வீசஸ் வெற்றி: சந்தோஷ் டிராபி கால்பந்தில்
மேற்கு வங்கம், சர்வீசஸ் வெற்றி: சந்தோஷ் டிராபி கால்பந்தில்
மேற்கு வங்கம், சர்வீசஸ் வெற்றி: சந்தோஷ் டிராபி கால்பந்தில்
ADDED : டிச 16, 2024 09:29 PM

ஐதராபாத்: சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் மேற்கு வங்க அணி 3-0 என தெலுங்கானா அணியை வீழ்த்தியது.
அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில் சந்தோஷ் டிராபி 78வது சீசன் நடக்கிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடக்கின்றன. மொத்தம் 12 அணிகள், இரண்டு பிரிவுகளாக விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-4' இடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
ஐதராபாத்தில் நடந்த 'ஏ' பிரிவு போட்டியில் மேற்கு வங்கம், தெலுங்கானா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய மேற்கு வங்க அணி 3-0 என்ற கோல் கணக்கில் தொடர்ச்சியாக 2வது வெற்றி பெற்றது.
மேற்கு வங்க அணிக்கு நரோஹரி ஸ்ரேஸ்தா (45+3, 56வது நிமிடம்), ராபி ஹன்ஸ்டா (39வது) கைகொடுத்தனர். முதல் போட்டியில் ஜம்மு காஷ்மீரை வென்ற மேற்கு வங்க அணி 6 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் உள்ளது.
மற்றொரு 'ஏ' பிரிவு போட்டியில் ஜம்மு காஷ்மீர், சர்வீசஸ் அணிகள் மோதின. இதில் சர்வீசஸ் அணி 4-0 என்ற கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. சர்வீசஸ் அணிக்கு லெத்தோலன் கோங்சாய் (11வது நிமிடம்), ஸ்ரேயாஸ் (26வது), ராகுல் ராமகிருஷ்ணன் (53வது), திங்னம் பித்யாசாகர் சிங் (54வது) கைகொடுத்தனர்.
சர்வீசஸ் அணி 2 போட்டியில், ஒரு வெற்றி, ஒரு தோல்வி என 3 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.