/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ்: கார்ல்சன்-அர்ஜுன் 'டிரா'
/
செஸ்: கார்ல்சன்-அர்ஜுன் 'டிரா'
ADDED : மே 08, 2024 10:33 PM

வார்சா: கிராண்ட் செஸ் தொடரின் முதல் போட்டியில் கார்ல்சனுக்கு எதிராக 'டிரா' செய்தார் அர்ஜுன்.
போலந்தில் 9வது கிராண்ட் செஸ் தொடர் நேற்று துவங்கியது. இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன், ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' செஸ் நடக்கிறது. முதல் போட்டியில் அர்ஜுன்-கார்ல்சன் மோதினர்.
இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், போட்டியின் 50 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். மற்றொரு போட்டியில் அர்ஜுன், நெதர்லார்ந்தின் அனிஷ் கிரியை சந்தித்தார்.
இப்போட்டி 56 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. 'கேண்டிடேட்ஸ்' தொடரில் கோப்பை வென்ற குகேஷ், முதல் போட்டியில் ருமேனியாவின் கிரில் செவ்சென்கோவிடம் வீழ்ந்தார்.
இரண்டாவது போட்டியிலும் ஏமாற்றிய குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கிடம் தோல்வியடைந்தார். பிரக்ஞானந்தா முதல் போட்டியில் போலந்தின் டுடாவுக்கு எதிராக 'டிரா' செய்தார். அடுத்த போட்டியில் செவ்சென்கோவிடம் வீழ்ந்தார்.
முதல் இரண்டு சுற்று முடிவில் அர்ஜுன் (2) 5வது இடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா (1) 9வது, குகேஷ் (0) 10வது இடத்தில் உள்ளனர்.

