/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கார்ல்சனை வென்றார் பிரக்ஞானந்தா * கிராண்ட் செஸ் தொடரில் அபாரம்
/
கார்ல்சனை வென்றார் பிரக்ஞானந்தா * கிராண்ட் செஸ் தொடரில் அபாரம்
கார்ல்சனை வென்றார் பிரக்ஞானந்தா * கிராண்ட் செஸ் தொடரில் அபாரம்
கார்ல்சனை வென்றார் பிரக்ஞானந்தா * கிராண்ட் செஸ் தொடரில் அபாரம்
ADDED : மே 12, 2024 12:10 AM

வார்சா: கிராண்ட் செஸ் தொடரில் ஐந்துமுறை உலக சாம்பியன் ஆன கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.
போலந்தில் கிராண்ட் செஸ் தொடரின் முதல் சீசன் நடக்கிறது. இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன், நார்வேயின் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். தற்போது 'பிளிட்ஸ்' (அதிவேகம்) செஸ் நடக்கிறது.
இதன் 2வது சுற்றில் பிரக்ஞானந்தா, கார்ல்சன் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 69 வது நகர்த்தலில் கார்ல்சனை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். ஐந்தாவது சுற்றில் ருமேனிய வீரர் செவ்சென்கோவை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. 6வது சுற்றில் சக வீரர் குகேஷை வென்றார். இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, சக வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தாவுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தினார்.
மொத்தம் நேற்று நடந்த ஒன்பது சுற்று முடிவில் சீனாவின் வெய் இ (5.5 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்கள் அர்ஜுன் (5.0), பிரக்ஞானந்தா (4.5) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். கார்ல்சன் (4) 4, குகேஷ் (2) 9வது இடத்தில் உள்ளனர்.