தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/குகேஷ்-சிந்தாரோவ் 4வது 'டிரா': உலக செஸ் சாம்பியன்ஷிப்பில்

குகேஷ்-சிந்தாரோவ் 4வது 'டிரா': உலக செஸ் சாம்பியன்ஷிப்பில்

குகேஷ்-சிந்தாரோவ் 4வது 'டிரா': உலக செஸ் சாம்பியன்ஷிப்பில்


UPDATED : நவ 28, 2026 11:34 PM

ADDED : நவ 28, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 11:34 PM ADDED : நவ 28, 2026 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெனிவா: குகேஷ், சிந்தாரோவ் மோதிய உலக செஸ் சாம்பியன்ஷிப் 4வது சுற்று 'டிரா' ஆனது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதன் மொத்த பரிசுத் தொகை ரூ. 23.37 கோடி. இதில் நடப்பு சாம்பியனும், உலகின் 'நம்பர்-26' வீரருமான இந்தியாவின் குகேஷ், 20, கேண்டிடேட்ஸ் தொடரில் சாதித்த, உலகின் 'நம்பர்-4' வீரர் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தாரோவ், 20, விளையாடுகின்றனர். இதில் 'கிளாசிக்கல்' முறையில் மொத்தம் 14 சுற்று நடக்கிறது. முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம். முதல் மூன்று சுற்று 'டிரா' ஆனது.

நேற்று, நான்காவது சுற்று நடந்தது. இதில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். இருவரும், தங்களது ராஜாவுக்கு முன் இருந்த சிப்பாயை நகர்த்தி, 'பெட்ரோ டிபன்ஸ்' முறையில் போட்டியை துவக்கினர். விறுவிறுப்பான இப்போட்டி 34வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. நான்கு சுற்றுகளின் முடிவில் போட்டி 2.0 - 2.0 என சமநிலையில் உள்ளது. இன்று, ஐந்தாவது சுற்று நடக்கவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us