/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அபினவ்-பிரஞ்சலி ஜோடி 'தங்கம்': 'டெப்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில்

ADDED : நவ 19, 2025 10:47 PM

டோக்கியோ: 'டெப்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அபினவ், பிரஞ்சலி ஜோடி தங்கம் வென்றது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், காது கேளாதோருக்கான 'டெப்லிம்பிக்ஸ்' 25வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 45 வீரர், 28 வீராங்கனைகள் என மொத்தம் 73 பேர் பங்கேற்கின்றனர். துப்பாக்கி சுடுதல் கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அபினவ் தேஷ்வல், பிரஞ்சலி பிரஷாந்த் துமால் ஜோடி 569.20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு இந்திய ஜோடி அனுயா பிரசாத், வினோத் குமார் ஜோடி (553.10 புள்ளி) 7வது இடம் பிடித்தது.
அடுத்து நடந்த பைனலில் அபினவ், பிரஞ்சலி ஜோடி 16-6 என்ற கணக்கில் சீனதைபேயின் யா-ஜு காவோ, மிங்-ஜுய் ஹசு ஜோடியை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றது.
ஆண்களுக்கான 50 மீ., 'ரைபிள் புரோன்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் குஷாக்ரா சிங் ரஜாவத் 608.7 புள்ளிகளுடன் 7 வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார். அடுத்து நடந்த பைனலில் அசத்திய குஷாக்ரா 224.3 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார்.