/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சாதனை சிகரம்: செஸ் 'கிங்' ஆனந்த்
/
சாதனை சிகரம்: செஸ் 'கிங்' ஆனந்த்
ADDED : மே 18, 2024 10:39 PM

இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த். 6 வயதில் தனது தாயார் சுஷிலாவிடம் இருந்து செஸ் விளையாட கற்றுக்கொண்டார். 1983ல் தேசிய சப்-ஜூனியர் போட்டியில் சாம்பியன் ஆனார். 1984, 1985ல் ஆசிய ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்ற இவர், இளம் வயதில் (15) 'சர்வதேச மாஸ்டர்' அந்தஸ்து பெற்ற இந்தியரானார்.
தனது 16வது வயதில் தேசிய சாம்பியன் ஆன ஆனந்த், 1987ல் உலக ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என பெருமை பெற்றார். 1988ல் 'கிராண்ட்மாஸ்டர்' அந்தஸ்து பெற்ற முதல் இந்தியர் ஆனார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் ஸ்பெயினின் அலெக்சி ஷிரோவ், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக், பீட்டர் ஸ்விட்லர், இஸ்ரேலின் போரிஸ் ஜெல்பாண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களை வீழ்த்திய ஆனந்த், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் கைப்பற்றினார். 40 ஆண்டுக்கும் மேலாக செஸ் போட்டியில் பங்கேற்று வரும் ஆனந்த், இளம் இந்திய செஸ் நட்சத்திரங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். இவரது வரிசையில் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, ஹம்பி, ஹரிகா, வைஷாலி என பலர் உலக அரங்கில் சாதிக்க, இந்தியா செஸ் வல்லரசாக மாறி வருகிறது.
'பயோ-டேட்டா'
பெயர்: விஸ்வநாதன் ஆனந்த்
பிறந்த நாள்: 11-12-1969
பிறந்த இடம்: மயிலாடுதுறை, தமிழகம்
விளையாட்டு: செஸ்
உலக தரவரிசை: 11வது இடம்
பதவி: துணை தலைவர், சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே')
வென்ற பட்டம்
உலக சாம்பியன்: 5 முறை (2000, 2007, 2008, 2010, 2012)
உலக கோப்பை: 2 முறை (2000, 2002)
விருதுகள்
அர்ஜுனா: 1985
பத்ம ஸ்ரீ: 1988
கேல் ரத்னா: 1991-92
பத்ம பூஷண்: 2001
பத்ம விபூஷண்: 2008

