/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் அஜித் நாராயணா: காமன்வெல்த் பளுதுாக்குதலில்
/
தங்கம் வென்றார் அஜித் நாராயணா: காமன்வெல்த் பளுதுாக்குதலில்
தங்கம் வென்றார் அஜித் நாராயணா: காமன்வெல்த் பளுதுாக்குதலில்
தங்கம் வென்றார் அஜித் நாராயணா: காமன்வெல்த் பளுதுாக்குதலில்
ADDED : ஆக 27, 2025 10:26 PM

ஆமதாபாத்: காமன்வெல்த் பளுதுாக்குதலில் இந்தியாவின் அஜித் (71 கிலோ) தங்கம் வென்றார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், காமன்வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 71 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அஜித் நாராயணா 26, பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 145, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 172 என, மொத்தம் 317 கிலோ பளுதுாக்கிய தமிழகத்தின் அஜித், புதிய காமன்வெல்த் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். நைஜீரியாவின் ஜோசப் எடிடியாங் உமோபியா (316 கிலோ) வெள்ளி வென்றார்.
பெண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் நிருபமா தேவி செரம், 'ஸ்னாட்ச்' பிரிவில் 91, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 126 என, மொத்தம் 217 கிலோ பளுதுாக்கி 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
ஜூனியர் ஆண்களுக்கான 71 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஹேமந்தா டோய்மாரி (264 கிலோ, 'ஸ்னாட்ச்' 118, 'கிளீன் அண்டு ஜெர்க்' 146) தங்கம் வென்றார். ஜூனியர் பெண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மிதுஸ்மிதா போய் (204 கிலோ, 'ஸ்னாட்ச்' 89, 'கிளீன் அண்டு ஜெர்க்' 115) தங்கத்தை தட்டிச் சென்றார்.

