/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அகில், அனிஷ் 'தங்கம்': கிராண்ட் பிரிக்ஸ் துப்பாக்கி சுடுதலில்
/
அகில், அனிஷ் 'தங்கம்': கிராண்ட் பிரிக்ஸ் துப்பாக்கி சுடுதலில்
அகில், அனிஷ் 'தங்கம்': கிராண்ட் பிரிக்ஸ் துப்பாக்கி சுடுதலில்
அகில், அனிஷ் 'தங்கம்': கிராண்ட் பிரிக்ஸ் துப்பாக்கி சுடுதலில்
ADDED : மார் 18, 2024 10:45 PM

வ்ரோக்லா: போலந்து கிராண்ட் பிரிக்ஸ் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அகில், அனிஷ் தங்கம் வென்றனர்.
போலந்தில் கிராண்ட் பிரிக்ஸ் துப்பாக்கி சுடுதல் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3பி' பிரிவில் இந்தியாவின் அகில் ஷியோரன் 468.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
ஆண்களுக்கான 25 மீ., 'ரேபிட்-பயர் பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான 'ரைபிள்-3பி' போட்டியில் இந்தியாவின் நீரஜ் குமார் இரண்டு வெண்கலம் வென்றார். இதன்மூலம் இவர், இத்தொடரில் இரண்டு பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரரானார்.
பெண்களுக்கான 'ரைபிள்-3பி' பிரிவில் இந்தியாவின் ஆஷி வெள்ளி வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்ரியங்கா வெண்கலத்தை தட்டிச் சென்றார்.
இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 6 பதக்கம் கிடைத்தன.