/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெள்ளி வென்றார் அனிஷ் பன்வாலா: ஆசிய துப்பாக்கி சுடுதலில்
/
வெள்ளி வென்றார் அனிஷ் பன்வாலா: ஆசிய துப்பாக்கி சுடுதலில்
வெள்ளி வென்றார் அனிஷ் பன்வாலா: ஆசிய துப்பாக்கி சுடுதலில்
வெள்ளி வென்றார் அனிஷ் பன்வாலா: ஆசிய துப்பாக்கி சுடுதலில்
ADDED : ஆக 27, 2025 10:24 PM

ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா (25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்') வெள்ளி வென்றார்.
கஜகஸ்தானில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான தனிநபர் 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஆதர்ஷ் சிங் (585.20 புள்ளி), அனிஷ் பன்வாலா (583.21) முறையே 2, 4வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். அடுத்து நடந்த பைனலில் அனிஷ் 35 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். மற்றொரு இந்திய வீரர் ஆதர்ஷ், 15 புள்ளிகளுடன் 5வது இடத்தை கைப்பற்றினார். சீனாவின் சு லியான்போபான் (36 புள்ளி) தங்கம் வென்றார்.
ஆண்கள் அணிகளுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவில் ஆதர்ஷ் சிங் (585.20 புள்ளி), அனிஷ் பன்வாலா (583.21), நீரஜ் குமார் (570.17) அடங்கிய இந்திய அணி, 1738.58 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
ஆண்கள் அணிகளுக்கான 50 மீ., 'பிஸ்டல்' பிரிவில் யோகேஷ் குமார் (548.6 புள்ளி), அமன்பிரீத் சிங் (543.6), ரவிந்தர் சிங் (542.9) அடங்கிய இந்திய அணி 1633.21 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது.
ஜூனியர் ஆண்கள் அணிகளுக்கான 50 மீ., 'பிஸ்டல்' பிரிவில் அபினவ் சவுத்ரி (541.9), உமேஷ் சவுத்ரி (529.5), முகேஷ் (523.11) அடங்கிய இந்திய அணி, 1593.25 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை கைப்பற்றியது.
ஜூனியர் கலப்பு அணிகளுக்கான 'டிராப்' பிரிவு பைனலில் ஆர்யா வன்ஷ் தியாகி, பவ்யா திரிபாதி ஜோடி 37-38 என கஜகஸ்தான் ஜோடியிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றது.
சீனியர் பிரிவில் இதுவரை 9 தங்கம் உட்பட 23 பதக்கம் வென்ற இந்தியா, 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (15 தங்கம், 27 பதக்கம்) நீடிக்கிறது.

