/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் அனுஷ்கா: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
/
தங்கம் வென்றார் அனுஷ்கா: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
தங்கம் வென்றார் அனுஷ்கா: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
தங்கம் வென்றார் அனுஷ்கா: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
ADDED : செப் 28, 2025 11:22 PM

புதுடில்லி: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அனுஷ்கா (50 மீ., 'ரைபிள்-3 பொசிஷன்ஸ்') தங்கம் வென்றார்.
டில்லியில், ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (ரைபிள்/பிஸ்டல்/ஷாட்கன்) தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொசிஷன்ஸ்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அனுஷ்கா தோகூர் (585.31 புள்ளி), மஹித் சாந்து (580.22), பிராச்சி ெய்க்வாட் (574.22) முறையே 1, 4, 7வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.
அடுத்து நடந்த பைனலில் அசத்திய அனுஷ்கா, 461.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார்.
இது, இம்முறை அனுஷ்கா கைப்பற்றிய 2வது தங்கம். ஏற்கனவே இவர், 50 மீ., 'ரைபிள் புரோன்' பிரிவில் தங்கம் வென்றிருந்தார். மற்ற இந்திய வீராங்கனைகளான மஹித் (422.7), பிராச்சி (399.3) முறையே 5, 7வது இடம் பிடித்து ஏமாற்றினர்.
அட்ரியன் 'வெள்ளி': ஆண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொசிசன்ஸ்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அட்ரியன் கர்மாகர் (587.34), வேதாந்த் நிதின் வாக்மேர் (577.21), சமி உல்லா கான் (573.16) முறையே 1, 3, 7வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.
அடுத்து நடந்த பைனலில் 454.8 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்த அட்ரியன் வெள்ளி வென்றார். மற்ற இந்திய வீரர்களான வேதாந்த் நிதின் (420.9), சமி உல்லா கான் (393.0) முறையே 4, 7வது இடம் பிடித்து ஏமாற்றினர்.
இதுவரை 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என, 13 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது.