/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெள்ளி வென்றார் ஸ்ரீஹரி * ஆசிய சாம்பியன்ஷிப்பில்...
/
வெள்ளி வென்றார் ஸ்ரீஹரி * ஆசிய சாம்பியன்ஷிப்பில்...
வெள்ளி வென்றார் ஸ்ரீஹரி * ஆசிய சாம்பியன்ஷிப்பில்...
வெள்ளி வென்றார் ஸ்ரீஹரி * ஆசிய சாம்பியன்ஷிப்பில்...
ADDED : செப் 28, 2025 11:25 PM

ஆமதாபாத்: ஆசிய 'அக்குவாட்டிக்' சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஸ்ரீஹரி, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்தியாவின் ஆமதாபாத்தில் முதன் முறையாக ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் (11வது சீசன்) நடக்கிறது. இதில் நீச்சல், வாட்டர் போலோ, டைவிங், ஆர்டிஸ்ட் நீச்சல் என நான்கு பிரிவுகளில் போட்டி நடக்கின்றன.
ஆண்களுக்கான 200 மீ., பிரீஸ்டைல் போட்டி தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் (1 நிமிடம், 51.09 வினாடி) 7வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். அடுத்து நடந்த பைனலில் அசத்திய ஸ்ரீஹரி, 1 நிமிடம், 48.47 வினாடி நேரத்தில் வந்து, இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
கடந்த 16 ஆண்டு நீச்சல் வரலாற்றில், ஆசிய அளவிலான போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இது ஆனது. ஆண்களுக்கான 50 மீ., 'பேக்ஸ்டிரோக்' பிரிவு பைனலில் ஸ்ரீஹரி, 25.46 வினாடி நேரத்தில் வந்து, மீண்டும் வெள்ளி வென்றார்.
பைனலில் தினிதி
பெண்களுக்கான 200 மீ., நீச்சலில் இந்தியாவின் தினிதி (2 நிமிடம், 02.84 வினாடி) 5வது இடம் பிடித்தார். இது புதிய தேசிய சாதனை (முன்னதாக தினிதி 2:02.97) ஆனது.
தவிர 100 மீ., பட்டர்பிளை போட்டியில் இந்திய வீரர்கள் ரோகித் பெனெடிக்சன் (53.75), பிக்ரம் (54.32), இந்திய வீராங்கனைகள் ஆஸ்தா (1:03.84), ஸ்ரீஸ்டி (1:05.94), பைனலுக்கு முன்னேறினர்.