/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வில்வித்தை: ஷர்வாரி கலக்கல்
/
வில்வித்தை: ஷர்வாரி கலக்கல்
ADDED : ஆக 25, 2025 10:33 PM

வின்னிபெக்: உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப், ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் ஷர்வாரி தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
கனடாவில் உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான ரிகர்வ் பிரிவில் போட்டிகள் நடந்தன. 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தனிநபர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் 16 வயது ஷர்வாரி ('நம்பர்-20', இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற தென் கொரியாவின் கிம் மின் ஜியாங்கை, 7-3 என வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.
இதில் மற்றொரு தென் கொரிய வீராங்கனை, கிம் இவோனை ('நம்பர்-3') சந்தித்தார். மூன்று செட் முடிவில் ஷர்வாரி 5-1 என முன்னிலை பெற்றார். அடுத்தடுத்து ஏமாற்ற, போட்டி 5-5 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'ஷூட் ஆப்' நடந்தது. இதில் 10-9 என முந்தினார். முடிவில் ஷர்வாரி 6-5 என 'திரில்' வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றார்.
தீபிகா குமாரி (2011), கோமலிகாவுக்கு (2021) அடுத்து, 18 வயது ரிகர்வ் பிரிவில் தங்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை ஆனார் ஷர்வாரி.
21 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு பைனலில் இந்தியாவின் சிகிதா, 142-136 என்ற கணக்கில் தென் கொரியாவின் எரின் பார்க்கை வீழ்த்தினார். யூத் உலக சாம்பியன்ஷிப், காம்பவுண்டு பிரிவில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை ஆனார்.
18 வயது காம்பவுண்டு தனிநபர் பிரிவு பைனலில், இந்தியாவின் பிரதிகா, 140-143 என அமெரிக்காவின் சவன்னாவிடம் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.