sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

பைனலில் இந்திய ஜோடி * ஆசிய பாரா வில்வித்தையில்...

/

பைனலில் இந்திய ஜோடி * ஆசிய பாரா வில்வித்தையில்...

பைனலில் இந்திய ஜோடி * ஆசிய பாரா வில்வித்தையில்...

பைனலில் இந்திய ஜோடி * ஆசிய பாரா வில்வித்தையில்...


ADDED : ஜூலை 04, 2025 10:46 PM

Google News

ADDED : ஜூலை 04, 2025 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஜிங்: சீனாவின் பீஜிங்கில் ஆசிய பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது.

காம்பவுண்டு ஓபன் பிரிவில் போட்டி நடந்தன. இந்தியாவின் ஷீத்தல் தேவி, ஜோதி ஜோடி, அரையிறுதியில் சீன தைபேவை சந்தித்தது. 3 செட் முடிவில் ஸ்கோர் 109-109 என இருந்தது. கடைசி செட்டில் (38-35) அசத்திய இந்தியா 147-144 என வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.

ஆண்கள் அரையிறுதியில் இந்தியாவின் ராகேஷ் குமார், ஷ்யாம் சுந்தர் ஜோடி, 157-148 என இந்தோனேஷியாவை சாய்த்து, பைனலுக்குள் நுழைந்தது. கலப்பு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராகேஷ்-ஜோதி ஜோடி 152-142 என இந்தோனேஷியாவை வென்றது.

அடுத்து ரீகர்வ் ஓபன் அணிகளுக்கான போட்டி நடந்தன. ஆண்கள் அரையிறுதியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், விவேக் ஜோடி 5-1 என தாய்லாந்தை வென்று, பைனலுக்குள் நுழைந்தது.

கலப்பு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், பாவ்னா ஜோடி, 'ஷூட் ஆப்' முறையில் 5-4 என இந்தோனேஷியாவை வீழ்த்தியது. பெண்கள் பிரிவில் இந்தியாவின் பூஜா, பாவ்னா ஜோடி, 6-2 என இந்தோனேஷியாவை வீழ்த்தி, வெண்கலம் கைப்பற்றியது.

இந்தியாவின் நவீன் தலால், நுருதின் ஜோடி, 'ஷூட் ஆப்' முறையில் கஜகஸ்தானை வென்று, வெண்கலம் வசப்படுத்தியது.






      Dinamalar
      Follow us